5 ரபேல் போர் விமானங்கள் நாளை இந்தியா வருகை: விமானப்படையின் வலிமை அதிகரிக்கும்

இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக 2016ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் நிறுவனம் தயாரித்து வழங்கும் என அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. தாக்குதல் ரகத்தை சேர்ந்த இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள்.இந்த 36 விமானங்களும் 2021ம் ஆண்டிற்குள் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த
 

ந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக 2016ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் நிறுவனம் தயாரித்து வழங்கும் என அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தாக்குதல் ரகத்தை சேர்ந்த இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள்.இந்த 36 விமானங்களும் 2021ம் ஆண்டிற்குள் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில் முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்டோபரில் இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்று விமானங்களுக்கு பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 10 விமானங்களில் 5 விமானங்கள் பயிற்சிக்காக பிரான்சிலேயே நிறுத்தப்பட்டிருக்கும். மற்ற 5 விமானங்கள் முதல் பிரிவாக இந்தியா வருகின்றன. அவை நேற்று பாரீசில் இருந்து இந்தியாவை நோக்கி சிறப்பான பயிற்சி பெற்றுள்ள இந்திய விமானப்படை அதிகாரிகள், இந்த விமானங்களை இந்தியாவுக்கு கொண்டு வருகின்றனர்.

இடையில் அமீரகத்தில் உள்ள பிரான்ஸ் நாட்டு விமானப்படை தளத்தில் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டசால்ட் நிறுவனத்தின் இந்த நவீன போர் விமானங்கள் மிக முக்கியமான ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் பெற்றவை.

ரேடார் எச்சரிக்கை வாங்கிகள், ஜாமர்கள், 10 மணிநேர விமான தரவு பதிவு, தேடுதல் மற்றும் வழிகாட்டி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த விமானங்களில் அடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com