311 எம்.பி.க்கள் இரு தவணை தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டுள்ளனர்; மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லா

 

கொரோனா தொற்று காரணமாக உறுப்பினர்கள் இடைவெளிவிட்டு அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தொடர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.

பாரளுமன்றம் கூட உள்ள நிலையில், 311- எம்.பிக்கள் கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் போட்டுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.  இது குறித்து மேலும் கூறுகையில்,

“மக்களவை உறுப்பினர்கள் 311 பேர் இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டுள்ளனர். சில காரணங்களுக்காக 23 பேர் முதல் தவணை தடுப்பூசிகூட செலுத்திக் கொள்ளவில்லை. எனினும், நாடாளுமன்ற வளாகத்தில் 24 மணி நேரம் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெருந்தொற்று காரணமாக உறுப்பினர்கள் இடைவெளிவிட்டு அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. 500-க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்கள் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்களுடன் நாடாளுமன்ற பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்” என்றார்.