கூலித் தொழிலாளர்களுக்கு ரூ.3000 நிதியுதவி! முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

கொரானோ தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் பல்வேறு நிவாரணங்களை வழங்கி வருகிறது. அனைத்து தொழிலகங்களும் முடங்கியுள்ள நிலையில் தினசரி வேலை செய்து வரும் கூலித் தொழிலாளிகளின் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள 65 ஆயிரம் கூலி தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகையாக 3 ஆயிரம் ரூபாய் வழங்க அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இது தவிர அம்மாநிலத்தில்
 

கொரானோ தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் பல்வேறு நிவாரணங்களை வழங்கி வருகிறது.

அனைத்து தொழிலகங்களும் முடங்கியுள்ள நிலையில் தினசரி வேலை செய்து வரும் கூலித் தொழிலாளிகளின் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள 65 ஆயிரம் கூலி தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகையாக 3 ஆயிரம் ரூபாய் வழங்க அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

இது தவிர அம்மாநிலத்தில் மூடப்பட்டுள்ள பள்ளிகள், விடுதிகள் இவற்றை தற்காலிக தங்குமிடமாக அவர்களுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒடிசாவில் தங்கி வேலை செய்து வரும் மற்ற மாநில தொழிலாளர்களுக்கும் தேவையான உதவிகள் செய்து தர மாவட்ட கலெக்டர்களுக்கு நவீன் பட் நாயக் உத்தரவிட்டுள்ளார்.

A1TamilNews.com