ஒரே நேரத்தில் படமெடுத்த நிற்கும் 3 கருநாகங்கள்..! வைரலாகும் புகைப்படங்கள்

 

இந்தியாவில் வனத்துறை அதிகாரி ஒருவர் மூன்று நாகப்பாம்புகள் ஒரே நேரத்தில் படமெடுத்து நிற்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

மிகவும் அரிய காட்சியை கொண்ட இந்த புகைப்படங்களின் தொகுப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகறது.

இந்தியாவின் காடுகள் பல்வேறு அதிசயங்கள் நிறைந்தவை. இந்தியா பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தாயகமாக இருப்பதால், இந்த பிராந்தியங்களில் ஆச்சரியங்களுக்கு பஞ்சமில்லை. பெரும்பாலும், நம்பமுடியாத பல அற்புதமான காட்சிகளைக் காண்கிறோம்.

அந்த வகையில் தற்போது, ​​மராட்டிய மாநிலத்தில் மூன்று நாகப்பாம்புகள் ஒரே நேரத்தில் படமெடுத்து நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்கள் ‘இந்தியன் வைல்ட்லைவ்’ என்ற ஃபேஸ்புக் குழுவில் முதலில் வெளிவந்தன. பாம்புகள் மீட்கப்பட்டு காட்டுக்குள் விடப்பட்ட பிறகு அந்த படங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அமராவதி மாவட்டத்தில் உள்ள ஹரிசல் வனப்பகுதியில் மூன்று நாகப்பாம்புகள் மரத்தடியில் சுருண்டிருப்பதை ராஜேந்திர செமால்கர் என்ற பயனர் தொடர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


அதில் ஒரு புகைப்படத்தை ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், “ஆசீர்வாதங்கள்... ஒரே நேரத்தில் மூன்று நாகப்பாம்புகள் உங்களை ஆசீர்வதிக்கும் போது” என்ற தலைப்பிட்டார்.

சில நிமிடங்களில் அவரது பதிவை ஆயிரக்கணக்கானோர் பார்த்து லைக் செய்துள்ளனர்.