புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.10,000 ரூபாய்! மத்திய அரசிடம் கோரிக்கை!

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏழை, எளிய,நடுத்தர என அனைத்து தரப்பு மக்களும் பெருமளவு பாதிக்கபட்டுள்ளனர். இருப்பினும் வேலைக்காக வெளியூர், வெளி மாநிலங்கள், வெளிநாடு சென்றிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மத்திய அரசு பிஎம் கேர் நிதியிலிருந்து தலா ரூ10000 வழங்க வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தாக்கத்தால் கற்பனை
 

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏழை, எளிய,நடுத்தர என அனைத்து தரப்பு மக்களும் பெருமளவு பாதிக்கபட்டுள்ளனர்.

இருப்பினும் வேலைக்காக வெளியூர், வெளி மாநிலங்கள், வெளிநாடு சென்றிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மத்திய அரசு பிஎம் கேர் நிதியிலிருந்து தலா ரூ10000 வழங்க வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தாக்கத்தால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பொதுமக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.

அவரகளில் புலம்பெயர் தொழிலாளர்கள், அமைப்பு சாரா பிரிவில் பணிபுரிபவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக வங்கிக் கணக்கில்ரூ.10000 செலுத்த மத்திய அரசு பரிசீலணை செய்ய வேண்டும்.

இந்த நிதியை பிரதமரின் நெருக்கடி கால மற்றும் நிவாரண நிதியிலிருந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என மம்தா பானர்ஜி தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com