இந்தியாவுக்கு 1 பில்லியன் டாலர்கள் நிதி வழங்கும் உலக வங்கி!

கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருக்கும் இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் அவசரகால நிதி வழங்க முன் வந்துள்ளது உலக வங்கி. கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களை சோதனை செய்வதற்கும், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களால் பாதிப்பு ஏற்பட்டவர்களை கண்டறிவதற்கும், தனிமைப் படுத்தும் மருத்துவ வளாகங்கள் அமைப்பததற்கும், மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்கும், இந்தத் தொகையை அவசரகால நிதியாக உலகவங்கி வழங்கியுள்ளது. வளரும் நாடுகளுக்கு கொரோனா பாதிப்பிலிருந்து மீட்பு நடவடிக்கைக்காக முதல் கட்ட நடவடிக்கையாக 160 பில்லியன் டாலர்களை உலக வங்கி
 

கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருக்கும் இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் அவசரகால நிதி வழங்க முன் வந்துள்ளது உலக வங்கி.

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களை சோதனை செய்வதற்கும், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களால் பாதிப்பு ஏற்பட்டவர்களை கண்டறிவதற்கும், தனிமைப் படுத்தும் மருத்துவ வளாகங்கள் அமைப்பததற்கும், மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்கும், இந்தத் தொகையை அவசரகால நிதியாக உலகவங்கி வழங்கியுள்ளது.

வளரும் நாடுகளுக்கு கொரோனா பாதிப்பிலிருந்து மீட்பு நடவடிக்கைக்காக முதல் கட்ட நடவடிக்கையாக 160 பில்லியன் டாலர்களை உலக வங்கி ஒதுக்கியுள்ளது. அடுத்த 15 மாத காலத்திற்குள் இந்த நிதி, பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலக வங்கி வழங்கியுள்ள அவசரகால நிதி இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7 ஆயிரத்து 600 கோடி ஆகும்.

A1TamilNews.com