மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் ஓரளவுக்கு லாபம் தரும். பயிர்த் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் தராது. சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். காதல் விவகாரத்தில் மோதல்கள் உண்டாகும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும்.
நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரம் நன்மை தராது. தொழில் நஷ்டத்தில் இயங்கும். சிலருக்கு பதவிகள் பறிபோகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு சிரமம் உண்டாகும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.
சாதகமான நாட்கள் : 1, 4, 3