மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – மேஷம்
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
மதிப்பு, செல்வாக்கு உயரும். உடல்நலம் நன்றாக இருக்கும். வாரக்கடைசியில் உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் வந்து சேரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்கும்.
உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும்.
காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை சிறிது லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும்.
சாதகமான நாட்கள் : 1, 3, 7