மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – மகரம்

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்) உடல்நலம் நன்றாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில கனவுகள், ஆசைகள் நிறைவேறும்.
 

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். 

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில கனவுகள், ஆசைகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.  சிலருக்கு புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு, செல்வாக்கு உயரும்.

பங்குச் சந்தை லாபம் தரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெறுவர். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். 

சந்திராஷ்டமம் : 2., 3, 4  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

சாதகமான நாட்கள் : 1, 3, 6

ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com