ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மகரம்!
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவிற்கான வாய்ப்புண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் ஓரளவுக்கு லாபம் தரும்.
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். கல்வியில் முன்னேற்றம் உண்டு. வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பயிர்த் தொழில் நல்ல பலன் தரும். எதிர்பாராத பணம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். பங்குச் சந்தை நன்மை தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள் : 17, 20, 22