ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்) உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பயிர்த் தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் ஓரளவுக்கு லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து
 

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பயிர்த் தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் ஓரளவுக்கு லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சினிமா, சங்கீதம் நஷ்டம் தரும். காதல் விவகாரங்களில் ஊடல்கள் ஊடல்கள் உண்டாகும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். பங்குச் சந்தையில் லாபம் தராது. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். நண்பர்களிடையே மோதல் உண்டாகும்.

எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். தொழில் நஷ்டத்தில் இயங்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான சூழ்நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஒப்பந்தக்காரர்கள் பிரச்சினையை சந்திக்க நேரிடும். தந்தையின் உடல்நலம் பாதிக்கும்.

சாதகமான நாட்கள் : 25, 26, 28

ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com