ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மேஷம்

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். மதிப்பு, செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும். பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில்,
 

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். மதிப்பு, செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும்.

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும். பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். 

பங்குச் சந்தை லாபம் தராது. காதல் விவகாரங்களில் மோதல் உண்டாகும். குழந்தைகளினால் நன்மை உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்கள் லாபம் அடைவர். புதிய பதவிகள் தேடி வரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.

சாதகமான நாட்கள் : 24, 28, 29

ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com