ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்
உடல்நலத்தில் கவனம் தேவை. வரவை விட செலவினங்கள் அதிகமாகும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். நடக்கவிருந்த சுபகாரியங்கள் தள்ளிப் போகும். நண்பர்களும் உறவினர்களும் பகைவர்களாக மாறுவர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. தொழில் நஷ்டத்தில் இயங்கும்.
உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடத்திற்கு மாற்றலாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் சிறிது முன்னேற்றமடையும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பயிர்த் தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும்.
ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். சினிமா, சங்கீதம் சிறிது முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை நன்மை தராது. சில கடன்கள் கவலையைத் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும்.
சாதகமான நாட்கள் : 24, 25, 26