குரு பெயர்ச்சி 2020! ரிஷப ராசிக்காரர்களுக்கு அரசியல் கைகொடுக்குமா?
எட்டாமிடம் மற்றும் பதினொன்றாம் இடத்திற்கு அதிபதியான குரு 9மிடத்தில் நீச்சமாகிறது. எனவே உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். கடன் தொல்லைகள் நீங்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
6-4-2021 முதல் குரு 10மிடமாகிய கும்பத்தில் சஞ்சரிக்கும் காலக் கட்டத்தில் தொழில் சம்மந்தமான சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மதிப்பு, செல்வாக்கு பாதிக்கப்படும். சில பதவிகள் பறிபோகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். நண்பர்கள் விலகிச் செல்வர். அரசியலில் ஆதரவாளர்கள் பிரிந்து செல்வர்.
குரு சஞ்சரிக்கும் நட்சத்திர சாரப்பலன்கள்
குரு 19-11-2020 முதல் 06-01-2021 வரை சூரியனுடைய நட்சத்திரமாகிய் உத்திராடத்தில் சஞ்சரிக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் பணவரவு உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்.
07-01-2021 முதல் 06-03-2021 வரை குரு சந்திரனுடைய நட்சத்திரமாகிய திருவோணத்தில் சஞ்சரிக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சில முக்கியமான ஆவணங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை ஏற்படும்.
குரு 07-03-2021 முதல் 21-5-2021 வரையிலும், 21-7-2021 முதல் 20-11-2021 வரையிலும் செவ்வாயினுடைய நட்சத்திரமாகிய அவிட்டத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. இந்தக் காலக்கட்டத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள்.
21-5-2021 முதல் 21-7-2021 வரையிலும் குரு இராகுவினுடைய நட்சத்திரமான சதயத்தில் சஞ்சரிக்கிறது. இப்போது அடிக்கடி பிரயாணம் ஏற்படும். பணவிரயம் உண்டாகும். உடல்நலம் பாதிக்கப்படும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். பிறப்பு ஜாதகத்தில் ராகு நல்ல இடத்தில் இருந்தால் நன்மையான பயன்களே நடைபெற்று வரும்.
பரிகாரம் : வெள்ளிக்கிழமை தோறும் விரதமிருந்து பராசக்தியை வழிபட்டு வந்தால் பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி கிடைக்கும்
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
A1TamilNews