குரு பெயர்ச்சி 2020! விருச்சிக ராசிக்காரர்கள் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்கிறீர்களா?
இது வரை 2மிடத்தில் சஞ்சரித்து வந்த குரு 19-11-2020 முதல் 3மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
6-4-2021 முதல் குரு 4மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, நிலம் , வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் நல்ல லாபம் தரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
குரு சஞ்சரிக்கும் நட்சத்திர சாரப்பலன்கள்
குரு 19-11-2020 முதல் 06-01-2021 வரை சூரியனுடைய நட்சத்திரமாகிய் உத்திராடத்தில் சஞ்சரிக்கிறது. சூரியன் 10மிடத்து அதிபதி ஆகும். எனவே வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும்.உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். ரேஸ், லாட்டரி நன்மை தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.
குரு 07-01-2021 முதல் 06-03-2021 வரை சந்திரனுடைய நட்சத்திரமாகிய திருவோணத்தில் சஞ்சரிக்கிறது. சந்திரன் 9மிடத்து அதிபதி ஆகும். எனவே அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.
07-03-2021 முதல் 21-5-2021 வரையிலும், 21-7-2021 முதல் 20-11-2021 வரையிலும் குரு செவ்வாயினுடைய நட்சத்திரமாகிய அவிட்டத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. செவ்வாய் 1 மற்றும் 3மிடத்து அதிபதி ஆகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும்.உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். உடல்நலம் சிறிது பாதிக்கப்படும். எதிரிகள் காணாமல் போவார்கள். கடனுதவி கிடைக்கும்.
21-5-2021 முதல் 21-7-2021 வரையிலும் குரு இராகுவினுடைய நட்சத்திரமான சதயத்தில் சஞ்சரிக்கிறது. ராகு ஜென்மத்தில் சஞ்சரிக்கிறது. முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். பிரயாணம் ஏற்படும். பிறப்பு ஜாதகத்தில் ராகு நல்ல வீடுகளில் அமர்ந்து இருந்தால் நன்மையான பலன்களைத் தரும்.
பரிகாரம்: .திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வர திருமகளின் அருள் கிடைக்கும்.
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
A1TamilNews