குரு பெயர்ச்சி 2020! பொதுப் பலன்கள்!!
ஆண்டுக்கு ஒரு முறை ஒரு இராசியிலிருந்து இன்னொரு இராசிக்கு மாறும் குரு, இந்த ஆண்டு 19-11-2020 அன்று இரவு தனுசு இராசியிலிருந்து மகர ராசிக்கு மாறியுள்ளது.
வழக்கத்தை விட அதி வேகமாக (அதிசாரம்) கும்பராசிக்கு 06-04-2021 அன்று மாறுகிறது. பின் அங்கே 20-06-2021 வரை நேர்கதியிலும் பின் வக்ரகதியில் 14-09-2021 வரை சஞ்சரிக்கிறது. 15-9-2021 அன்று வக்ரகதியில் மீண்டும் மகர ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. குருவின் வக்ர நிவர்த்தி 19-10-2021 அன்று நிகழ்கிறது. மீண்டும் குரு 20-11-2021 அன்று தனது பயணத்தைக் கும்ப இராசியிலிருந்து தொடர்கிறது.
குரு 06-01-2021 வரை சூரியனுடைய நட்சத்திரமாகிய் உத்திராடத்தில் சஞ்சரிக்கிறது. அதன்பின் 06-03-2021 முதல் 05-04-2021 வரை செவ்வாயின் நட்சத்திரமாகிய அவிட்டத்தில் மகர இராசியில் சஞ்சரிக்கிறது. அதன்பின் கும்ப இராசியில் அவிட்டம் நட்சத்திரத்தில் 21-05-2021 வரை சஞ்சரிக்கிறது.21-07-2021 வரை இராகுவின் நட்சத்திரமான சதயத்தில் சஞ்சரிக்கிறது. மீண்டும் 20-11-2021 வரை செவ்வாயின் நட்சத்திரமாகிய அவிட்டத்தில் சஞ்சரிக்கிறது.
பொதுப்பலன்
குரு இராசி மண்டலத்தில் 10ம் வீட்டில் அதாவது மகரத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. இது குருவுக்கு நீச்ச வீடாகும். 10ம் இடம் தொழில், மதிப்பு, அந்தஸ்து புகழ் ஆகியவற்றைக் குறிக்கிறது. எனவே குருவின் நீச்சத்தினால் தொழில்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு, சிலருக்கு பதவிகள் பறிபோகும். நிதிநிலையும் பாதிக்கப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.
குரு 06-04-2021 அன்ரு நீச்சத்திலிருந்து கும்பத்திற்குச் செல்வதால் நிலைமை சீரடையும். குரு இராசி மண்டலத்தில் 11ம் வீட்டில் சஞ்சரிக்கும் பொழுது, தொழில்கள் வளர்ச்சி அடையும். நிதிநிலைமை சீரடையும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். நல்லுறவு நீடிக்கும். நோயின் தாக்கம் குறையும். இனி, 12 இராசிகளுக்கான பலன்களைப் பார்ப்போம்.
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
A1TamilNews