குரு பெயர்ச்சி 2020! கடக ராசிக்காரர்களுக்கு தொழில் தொடங்கும் வாய்ப்பு இருக்காமே!!

 

இது வரை 6மிடத்தில் சஞ்சரித்து வந்த குரு 19-11-2020 முதல் 7மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. இதனால் திருமணம் நிச்சயமாகும். கூட்டு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும்.

6-4-2021 முதல் குரு 8மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. இந்தக்காலக்கட்டத்தில் குழப்பங்கள் மிகுந்து காணப்படும். உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் குழப்பம் ஏற்படும். கடன்கள் கவலையைத் தரும். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலம் பாதிக்கும்.

குரு சஞ்சரிக்கும்  நட்சத்திர சாரப்பலன்கள்

குரு 19-11-2020 முதல் 06-01-2021 வரை சூரியனுடைய நட்சத்திரமாகிய் உத்திராடத்தில் சஞ்சரிக்கிறது. சூரியன் 2மிடத்து அதிபதி. ஆகையால் பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரண்ச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். 

குரு 07-01-2021 முதல் 06-03-2021 வரை சந்திரனுடைய நட்சத்திரமாகிய திருவோணத்தில் சஞ்சரிக்கிறது. சந்திரன் இராகு அதிபதி ஆகையால் உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். அயல்நாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். 

07-03-2021 முதல் 21-5-2021 வரையிலும், 21-7-2021 முதல் 20-11-2021 வரையிலும் குரு செவ்வாயினுடைய நட்சத்திரமாகிய அவிட்டத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. செவ்வாய் 5மிடத்து மற்றும் 10மிடத்து அதிபதி ஆகும். இக்காலக் கட்டத்தில் தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் லாபகரமாக நடைபெறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் நன்மை பயக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். 

21-5-2021 முதல் 21-7-2021 வரையிலும் குரு இராகுவினுடைய நட்சத்திரமான சதயத்தில் சஞ்சரிக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில்  மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். கேளிக்கைகள் மிகுந்து காணப்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பிறப்பு ஜாதகத்தில் ராகு நல்ல வீடுகளில் அமர்ந்து இருந்தால், சிறப்பான பலன்களைத் தரும்.

பரிகாரம்: திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வர துன்பம் மறையும்.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

A1TamilNews