குரு பெயர்ச்சி 2020! தனுசு ராசிக்காரர்கள் வீடு, நிலம் , வாகனம் வாங்க முடியுமா?

 

இதுவரை ஜென்மராசியில் சஞ்சரித்து வந்த குரு 19-11-2020 முதல் 2மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. 1 மற்றும் 4 மிடத்து அதிபதி குருவாகிறார். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.  ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். உறவினர்கள் உதவி கிடைக்கும்.

6-4-2021 முதல் குரு 3மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. இடமாற்றம் உண்டாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங். எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குவீர்கள். சில முக்கியமான ஆவணங்கள் கையெழுத்தாகும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை ஏற்படும்

குரு சஞ்சரிக்கும்  நட்சத்திர சாரப்பலன்கள்

19-11-2020 முதல் 6-1-2021 வரை குரு சூரியனுடைய நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிக்கிறது. சூரியன் 9மிடத்து அதிபதி ஆகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.

குரு 7-1-2021 முதல் 6-3-2021 வரை சந்திரனுடைய நட்சத்திரமான திருவோணத்தில் சஞ்சரிக்கிறது. சந்திரன் 8மிடத்து அதிபதி ஆகையினால் மனக்கவலை மிகுந்து காணப்படும். உடல்நலத்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டும் போது நிதானம் தேவை. உழைக்காத பணம் கிடைக்க வாய்ப்புண்டு. இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். நில சம்மந்தமான வில்லங்கங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதினால் பத்திரங்களை சரிபார்ப்பது நல்லது.

குரு 7-3-2021 முதல் 21-5-2021 வரையிலும் மற்றும் 21-7-2021 முதல் 20-11-2021 வரையிலும் செவ்வாயினுடைய நட்சத்திரமான அவிட்டத்தில் சஞ்சரிக்கிறது. செவ்வாய் 5மிடம் மற்றும் 12மிடத்து அதிபதி ஆகிறது. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகள் மறைந்து போவார்கள்.

21-5-2021 முதல் 21-7-2021 வரையிலும் குரு ராகுவினுடைய நட்சத்திரமான சதயத்தில் சஞ்சரிக்கிறது. ராகு 6மிடத்தில் சஞ்சரிப்பதினால் வீண் விரயம் உண்டாகும். சுப விரயத்திற்கு வாய்ப்பு உண்டு. சில முதலீடுகள் செய்ய நேரிடும். வித்தியாசமான சூழ்நிலையில் வாழ நேரிடும். நீண்ட தூர பிரயாணம் ஏற்படும்.

பரிகாரம் : வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வணங்கி வர நிதிநிலை உயரும்.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

A1TamilNews