குரு பெயர்ச்சி 2020! மேஷ ராசிக்காரர்கள் மலைக்குப் போய் வர வேண்டியிருக்குதே!
குரு 19-11-2020 முதல் பத்தாம் இடத்தில் தொடங்குவதால், தொழில் முடக்கம் ஏற்படும். மதிப்பு செல்வாக்கு சரியும். சிலருக்கு பதவி பறிபோகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தள்ளிப் போகும். முதலீடு லாபம் தராது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். பிரயாணம் தடைபடும்.
06-04-2021 முதல் பதினோறாம் இடத்தில் சஞ்சரிக்கத் தொடங்கிய பின் பணவரவு தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகள் கைகொடுக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். பிரயாணங்கள் நன்மை தரும். தொழில் சம்மந்தமான சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மதிப்பு, செல்வாக்கு உயரும்.புதிய பதவிகள் தேடி வரும். ஆன்மீக சிந்தனைகள் அதிகமாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும்.
குரு சஞ்சரிக்கும் நட்சத்திர சாரப்பலன்கள்
குரு 19-11-2020 முதல் 06-01-2021 வரை சூரியனுடைய நட்சத்திரமாகிய் உத்திராடத்தில் சஞ்சரிக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சிலருக்கு புத்திரப் பாக்கியம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். பங்குச் சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் நன்மை பயக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும்.
07-01-2021 முதல் 06-03-2021 வரை குரு சந்திரனுடைய நட்சத்திரமாகிய திருவோணத்தில் சஞ்சரிக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
07-03-2021 முதல் 21-5-2021 வரையிலும், 21-7-2021 முதல் 20-11-2021 வரையிலும் குரு செவ்வாயினுடைய நட்சத்திரமாகிய அவிட்டத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. இதனால் உழைக்காத பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. வாகனம் ஏற்படும் போது நிதானம் தேவை. கடன் தொல்லை அகலும்.
21-5-2021 முதல் 21-7-2021 வரையிலும் குரு இராகுவினுடைய நட்சத்திரமான சதயத்தில் சஞ்சரிக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. மனக்கவலை அதிகரித்து காணப்படும். விபத்து அல்லது அறுவை சிகிச்சைக்கு வாய்ப்புள்ளது. அயல்நாட்டுப் பிரயாணம் தடைபடும். வம்பு வழக்குகள் வர வாய்ப்புள்ள நிலையில் கவனம் தேவை. ஆனால், பிறப்பு ஜாதகத்தில் ராகு நல்ல வீடுகளில் இருந்தால் சுபமான பலன்களே நடைபெறும்.
பரிகாரம் : மலை மீது இருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வர மனக்கவலைகள் தீரும்.
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
A1TamilNews