குரு பெயர்ச்சி 2020! மகர ராசிக்காரர்கள் இடமாற்றத்திற்கு திட்டமிட்டுள்ளீர்களா?
இது வரை விரயஸ்தானமான 12மிடத்தில் சஞ்சரித்து வந்த குரு 19-11-2020 முதல் 1மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. குரு 3மிடம் மற்றும் 12மிடத்து அதிபதி ஆகும். இடமாற்றம் உண்டாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். சில முக்கியமான் ஆவணங்கள் கையெழுத்தாகும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை ஏற்படும். முதலீடுகள் நன்மை தரும். சுப விரயம் உண்டாகும். சில முதலீடுகள் செய்ய நேரிடும்.
6-4-2021 முதல் குரு 2மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. இந்தக் காலக்கட்டத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். நிதி நிலை உயரும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில நிலங்களை விற்க நேரிடும்.
குரு சஞ்சரிக்கும் நட்சத்திர சாரப்பலன்கள்
19-11-2020 முதல் 6-1-2021 வரை குரு சூரியனுடைய நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிக்கிறது. சூரியன் 8மிடத்து அதிபதி ஆகும். சில மனக்கவலை உண்டாகும். காரியங்களில் தடைகள் காணப்படும். உழைக்காத பணம் கிடைக்க வாய்ப்புண்டு. இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். உடலநலத்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டும் போது நிதானம் தேவை.
குரு 7-1-2021 முதல் 6-3-2021 வரை சந்திரனுடைய நட்சத்திரமான திருவோணத்தில் சஞ்சரிக்கிறது. சந்திரன் 7மிடத்து அதிபதி ஆகும். இந்தக் காலக்கட்டத்தில் திருமணம் நடைபெறும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் காணப்படும். முதியவர்களின் உடல்நலத்தில் கவனம் காட்ட வேண்டும்.
குரு 7-3-2021 முதல் 21-5-2021 வரையிலும் மற்றும் 21-7-2021 முதல் 20-11-2021 வரையிலும் செவ்வாயினுடைய நட்சத்திரமான அவிட்டத்தில் சஞ்சரிக்கிறது. செவ்வாய் 4மிடம் மற்றும் 11மிடத்து அதிபதி ஆகும்.. வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த் தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியைத் தரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
21-5-2021 முதல் 21-7-2021 வரையிலும் குரு ராகுவினுடைய நட்சத்திரமான சதயத்தில் சஞ்சரிக்கிறது. ராகு 5மிடத்தில் சஞ்சரிக்கிறது. சினிமா, சங்கீதம் முன்னேற்றகரமாக நடைபெறும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும்.புதிய பதவிகள் தேடிவரும்.
பரிகாரம் : கால பைரவரை தேய்பிறை அஷ்டமி அன்று விரதமிருந்து வழிபட துன்பங்கள் விலகும்
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
A1TamilNews