குரு பெயர்ச்சி 2020! கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பார்க்கும் பணம் கிடைக்கும்!
இது வரை விரயஸ்தானமான 11மிடத்தில் சஞ்சரித்து வந்த குரு 19-11-2020 முதல் 12மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. குரு 2மிடம் மற்றும் 11மிடத்து அதிபதி ஆகும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சுப விரயம் ஏற்படும். மகிழ்ச்சிகரமான சூழ்நிலை குடும்பத்தில் காணப்படும்.
6-4-2021 முதல் குரு 1மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. இடமாற்றம் உண்டாகும். அடிக்கடி பிரயாணம் ஏற்படும். உடல்நலம் நன்றாக இருக்கும். முய்ற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
குரு சஞ்சரிக்கும் நட்சத்திர சாரப்பலன்கள்
19-11-2020 முதல் 6-1-2021 வரை குரு சூரியனுடைய நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிக்கிறது. சூரியன் 7மிடத்து அதிபதி ஆகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமணம் நடைபெறும்.கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். கண்வன், மனைவி உறவு நன்றாக இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் காணப்பட்டாலும் லாபம் குறையாது. பிரயாணங்களும் இடமாற்றமும் நன்மை தரும்.
குரு 7-1-2021 முதல் 6-3-2021 வரை சந்திரனுடைய நட்சத்திரமான திருவோணத்தில் சஞ்சரிக்கிறது. சந்திரன் 6மிடத்து அதிபதி ஆகும். இந்தக் காலக்கட்டத்தில் வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளை வீழ்த்த சரியான நேரமிது.
குரு 7-3-2021 முதல் 21-5-2021 வரையிலும் மற்றும் 21-7-2021 முதல் 20-11-2021 வரையிலும் செவ்வாயினுடைய நட்சத்திரமான அவிட்டத்தில் சஞ்சரிக்கிறது. செவ்வாய் 3மிடம் மற்றும் 10மிடத்து அதிபதி ஆகும்.. உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். தொழிலில் சில மாற்றங்கள் செய்ய நேரிடும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் சம்மந்தமான சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும்.
21-5-2021 முதல் 21-7-2021 வரையிலும் குரு ராகுவினுடைய நட்சத்திரமான சதயத்தில் சஞ்சரிக்கிறது. ராகு 4மிடத்தில் சஞ்சரிக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்ன்னேற்றம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
பரிகாரம் : சனிக்கிழமைகளில் காகத்திற்கு எள் சோறு வைத்து வந்தால் சங்கடங்கள் தீரும்
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
A1TamilNews