வள்ளலார் மையம் ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல்!

 

வடலூரில் வள்ளலார் இராமலிங்க அடிகளாருக்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் வள்ளாலர் பன்னாட்டு மையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

சர்வதேச மையம் அமைக்கப்பட்டு மீண்டும் சத்திய ஞான சபை வசமே ஒப்படைக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்த நிலையில், இதை எதிர்த்து வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மையம் அமைய உள்ள இடம்  100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த வழிபாட்டு தலத்தை பாதுகாக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. அரசு தரப்பில்அந்த வழிபாட்டுத் தலம் புராதன சின்னம் தான். அதை அரசு தொடப்போவதில்லை. ஆனால் அந்த நிலம் தொல்லியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்று வாதிடப்பட்டது.

இந்நிலையில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறநிலையத் துறை சார்பில் சமர்ப்பித்துள்ளனர். பெருவெளியில் கட்டுமானங்கள் கட்டுவதற்கான தடை உத்தரவு நீடிக்கும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.