கல்வியால் உலகை நீங்கள் ஆள வேண்டும்... மாணவர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்!!
கல்வியால் உலகை நீங்கள் ஆள நானும் நமது திராவிட மாடல் அரசும் என்றும் துணை நிற்போம் என்று மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடிமைப்பணி தேர்வுகளில் மாணவர்கள் வெற்றிபெறுவதற்காக தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் திட்டங்களை விவரித்துப் பேசிய முதலமைச்சர், இந்த ஆண்டு குடிமைப்பணித் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று கூறினார்.
சட்டப்பேரவையில் பேசிய காணொலி காட்சியுடன் நான் முதல்வன் திட்டக் காணொலியையும் இணைத்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நமது திராவிட மாடலில் தலைநிமிரும் தமிழ்நாட்டின் மாணவர்கள் தங்கள் திறன்களை மெருகேற்றிக் கொண்டு சுடர்விடத் தொடங்கியநான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் குடிமைப் பணிக்கான தேர்வுகளை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த வெற்றி மென்மேலும் பல்கிப் பெருகிட, சென்னை செனாய் நகரில் 500 மாணவர்கள் தங்கிப் பயிற்சி பெறுவதற்கான அனைத்து வசதிகளுடன் ரூ.40 கோடியில் UPSC பயிற்சி மையம் அமைக்க இருக்கிறோம்! கல்வியால் உலகை நீங்கள் ஆள நானும் நமது திராவிட மாடல் அரசும் என்றும் துணை நிற்போம்!” என்று கூறியுள்ளார்.