தொடை நடுங்கி என்றுமே தலைவனாக முடியாது.. நாம் தமிழர் கட்சி காட்டம்!!
கரூர் துயரச் சம்பவத்திற்குப் பிறகு விஜய் யை சுற்றியே தமிழ்நாடு அரசியல் களம் சுழன்று கொண்டிருக்கிறது. பாஜக அணியில் சேர்வார், காங்கிரஸுடன் கூட்டணி வைப்பார்.. இல்லையில்லை தனியாகவே நிற்பார் என நாள்தோறு விஜய் பேச்சாகவே இருக்கிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தரப்பில் குமரிக் கிழவனார் என்ற பெயரில் ஒரு பதிவு சமூகத் தளங்களில் பரவி வருகிறது. தொடை நடுங்கி என்றுமே தலைவனாக முடியாது என்று மிகவும் காட்டமாகக் கூறப்பட்டுள்ள அந்த பதிவின் விவரம் வருமாறு,
”தமிழ்நாட்டில் ஊடக கோயபல்சுகள் என்று ஒரு கூட்டம் இருக்கிறது இந்தக் கோயபல்சுகள் தமிழ்நாட்டில் கடந்த ஒரு வருடமாக விஜய்யை இரண்டாவது அல்லது மூன்றாவது சக்தியாக தொடர்ந்து முன்னிலைப்படுத்திக் கொண்டே இருந்தார்கள்.விஜய் தான் மாற்று சக்தி என்று பேசாத ஊடகத்தான் ஒருவன் கூட இல்லை விதிவிலக்குகள் தவிர்த்து.
விஜய் கட்சிக்கு கட்டமைப்பு இருப்பது போலவும் அவர்கள் பூத் கமிட்டியை எல்லா இடத்திலும் போட்டுவிட்டது போலவும் அவர்கள் தான் தமிழ்நாடு முழுவதும் கிளைபரப்பி இருப்பது போலவும் ஒரு பொய்மையை தொடர்ந்து பரப்பிக் கொண்டிருந்தார்கள்..
கரூர் சம்பவம் நடந்த இன்று ஏழாவது நாள் இந்த ஏழாவது நாள் வரை ஒரு மாவட்டத்தில் கூட பலியான நாற்பத்தியொரு பேர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவில்லை செலுத்த முடியவில்லை தவெகவினர் ஓடி ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள் அல்லது அவர்களுக்கு அதறாகான கட்டமைப்பு இல்லை என்பது வெகு தெளிவாக தெரிகிறது.
இரண்டாம் கட்ட தலைவர்களும் மூன்றாம் கட்ட தலைவர்களோ கட்டமைப்போ இல்லாத ஒரு சில்லறை கூட்டமாக திரிந்த இந்த கூட்டத்தை தான் இந்த ஊடகவியலாளர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டில் மாற்று சக்தியாக முன் நிறுத்திக் கொண்டிருந்தார்கள்.
இதில் ஒரு படி மேலே போய் ஐயகோ விஜய் வந்துவிட்டார் நாம் தமிழர் அழிந்துவிட்டது என்பதைப் போன்ற கதைகளை பரப்பிக் கொண்டிருந்தார்கள்..........
தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் நாம் தமிழர் அந்த 38 மாவட்டங்களை மூன்றாக பிரித்து 114 மாவட்டமாக வைத்துள்ளது எல்லா மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் நான்கு பொறுப்பாளர்கள் அவர்களுக்கு ஆதரவாளராக 20 நபர்கள் என்று அவர்களால் நூறு பேரை ஒரே மணிநேரத்தில் கூட்ட முடியும்..........
கட்சி ஆர்ப்பாட்டத்தை நடத்த நினைத்தால் குறைந்த பட்சம் தமிழ்நாடு முழுவதும் 11,400 பேரை அவர்களால் கூட்ட முடியும். ஒரே ஆர்ப்பாட்டத்தில் 100 வழக்குகளை வாங்கிய சம்பவங்கள் வரை செய்திருக்கிறார்கள். அந்த நூறு வழக்குகளையும் தங்கள் சுய பலத்தாலோ அல்லது கட்சி சார்ந்த வழக்கறிஞர்களாலோ அவர்களால் முறியடிக்க முடியும் தொடர்ந்து முன்னேறி சென்று கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் சூத்திரத்தில் கண்டிப்பாக அவர்கள் வெற்றி பெறுவதற்கான இடத்தில் இல்லை என்றாலும் தமிழ்நாட்டில் மூன்றாவது கட்சி என்றும் அவர்கள் தான் இவர்களுக்கு பிறகுதான் விஜயோ விஷாலோ அல்லது விக்ரம் பிரபுவோ.
கரூர் சம்பவத்திற்கு முன்பு விஜயை மாற்று சக்தியாக பேசிய ஊடகத்தான்கள் அனைவரும் கரூர் சம்பவத்திற்கு பொறுப்பாளர்கள் ஆவார்கள் அவர்கள் தான் விஜய் வென்று விடுவார் விஜய் வென்று விடுவார் என்ற பொய்யை தொடர்ந்து அரசியல் அறியா இளம்பிள்ளைகளிடம் விதைத்ததில் முக்கியமானவர்கள்,............
விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பும் கட்சி தொடங்கியதற்கு பின்பும் ரோட் ஷோக்கள் நடத்த தொடங்கியதற்கு முன்பும் கரூர் மரணத்திற்கு முன்பும் பின்பும் இன்று வரை நான் சொல்கிறேன் விஜய்யின் கட்சிக்கு கட்டமைப்பு இல்லை விஜய் தனியாக இருந்தால் மூன்று சதவீதம் கூட வாக்குகளை வாங்க முடியாத ஒரு பலவீனமான தலைமைக்கு லாயக்கற்ற தொடை நடுங்கி.. ஒரு தொடை நடுங்கி என்றுமே தலைவனாக முடியாது.”
விஜய் ரசிகர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது குமரிக்கிழவனாரின் இந்தப் பதிவு