திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் பெண் குத்திக்கொலை.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி!!

 

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த 1-ம் தேதி பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் காமராஜர் சாலையில் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் தினந்தோறும் பயணிகள் கூட்டம் அதிகம் கானப்படுவது வழக்கம். கடந்த 1-ம் தேதி இரவு 10 மணி அளவில் கோவில் வழி பகுதியை சேர்ந்த சாந்தி என்பவர் மினி பேருந்து நிற்கும் இடத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். 

அப்போது பேருந்து நிலையத்திற்கு வந்த நபவர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாந்தியின் பின்புற கழுத்தில் சரமரியாக குத்தியுள்ளார். வலி தாங்காமல் பெண் அலறி துடித்துள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பெண்ணை கொலை செய்யும் நோக்கத்தில் கத்தியால் குத்திய கணேசன் என்பவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் அங்கு ரத்த வெள்ளத்தில் மிதந்த சாந்தியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சாந்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து பெண்ணை கத்தியால் குத்திய நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த கணேசன் (52) என்பதும், ஆக்டிங் டிரைவராக பணியாற்றும் இவர், திருமணமாகாத நிலையில், பழனிக்கு சென்ற போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பவளக்கொடி (எ) சாந்தி (48) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது, பேருந்து நிலையத்தில் சாந்தி வேறு ஒரு நபருடன் பேசிக் கொண்டிருந்ததை கண்டதும் ஆத்திரமடைந்த கணேசன் காய்கறி வெட்டும் கத்தியால் சாந்தியின் தலை மற்றும் பின் முதுகு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சாந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.