3 நாட்களுக்குள் கரூர் திட்டம் மாறியது ஏன்? விஜய் யின் கழுத்தை நெரிக்கும் வழக்குகள்!!

 

தன்னுடைய ரசிகர்களை அரசியல்படுத்தாமல் தான் தோன்றித்தனமாக வெறிபிடித்த கூட்டமாக நடத்திக் கொண்டிருந்த நடிகர் விஜய் க்கு எதிரான வழக்குகள் அவருக்கு பெரும் நெருக்கடியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்நீதிமன்ற கிளை மற்றும் கரூர் நீதிமன்றங்களில் நீதி அரசர்கள் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் விஜய் தரப்பிற்கு எதிராகவே உள்ளது. சமூகத்தளத்தில் விஜய் மீது வைக்கப்படும் குற்றசாட்டுகள் அனைத்தையும் நீதியரசர்கள் கேள்வியாக எழுப்பியுள்ளனர். மேலுm, விஜய் ஐ ஏன் வழக்கில் சேர்க்கவில்லை, கைது செய்யவில்லை என்றும் கேட்டுள்ளனர்.

டிசம்பர் மாதம் தான் கரூர் பிரச்சாரம் என்று முடிவு செய்து விட்டு அவசர அவசரமாக 27ம் தேதி கூட்டம் நடத்த 23 ம் தேதி அனுமதி கோரியதன் காரணம் என்ன என்ற கிடுக்கிப்பிடி கேள்வியையும் நீதிமன்றம் எழுப்பியுள்ளது. போலீசார் தரப்பில், தவெக தரப்பினர் தான் இந்த குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே போல் ஆதவ் அர்ஜுனா மீதும் ஏன் வழக்கு தொடர்ந்து கைது செய்யவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அனைவராலும் மறக்கடிக்கப்பட்ட விஜய் பேருந்து சக்கரத்தில் விழுந்த ரசிகர்கள் பற்றி நீதிமன்றத்தின் கேள்விகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பஸ்சை ஏன் கைப்பற்றவில்லை, ஏன் வழக்கு தொடரவில்லை என அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. 

துயரச்சம்பவம் நடந்த இடத்தை விட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவரும் ஏன் ஓடிப்போனார்கள் என்ற கேள்விக்கு விஜய் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. சிபிஐ க்கு வழக்கை மாற்ற வேண்டும் என்ற தவெக வின் கோரிக்கையில் வலுவான காரணங்கள் இல்லை. சென்னை  நீதிமன்றத்தில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் சிபிஐக்கு மாற்றக் கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

விஜய் பிரச்சார பேருந்தில் நாலா பக்கமும் சிசிடிவி கேமரா இருப்பதால், அதன் வீடியோ பதிவை போலீசார் கேட்டுள்ளனர். பேருந்து விபத்து குறித்தும் புதிய வழக்கு தொடரப்படும் என்று தெரிகிறது.

சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து சிறப்புப் புலனாய்வு குழுவை  மூத்த காவல் அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையில் நியமித்துள்ளது

இந்த வழக்குகள் அனைத்தும் விஜய் க்கு எதிராகவே திரும்பும் என்று தெரிகிறது. ஒடி ஒளிவதற்கு இனி இடம் இல்லை. பாஜக வை நம்பி மேலும் மேலும் சிக்கல்களை உருவாக்காமல், புதிய ஆலோசகர்களை நலம் விரும்பிகளை உடன் வைத்துக் கொண்டு  நேர்மையாக வழக்குகளை சந்தித்து மக்களிடம் உண்மையான அக்கறையை காட்டினால் மட்டுமே விஜய் க்கு அரசியல் எதிர்காலம் உண்டு.

-ஸ்கார்ப்பியன்