எந்த திசையில் இருந்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி‌.. விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

 

எந்த திசையில் யார் வந்தாலும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு பதிலடி கொடுத்தார்.

தவெக தலைவர் விஜய் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டில் வைத்து தன் கட்சி கொள்கைகளை அறிவித்து, தனது அரசியல் மற்றும் கொள்கை எதிரிகள் யார் யார் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். அப்போது, திமுக கட்சியை நடிகர் விஜய் விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திருவுருவ சிலையை நேற்று மாலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, எல்லாருக்கும் நன்றி.. இன்றிலிருந்து நாம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குவோம். நம் திட்டங்கள் எல்லாத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பயனாளிகள் இருக்காங்க. அவர்கள் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு பிரச்சாரத்தை தொடங்குவோம்.

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் யாராக இருந்தாலும், எதிர்த்து யார் வந்தாலும், எப்பேர்பட்ட கூட்டணி அமைச்சாலும், எந்த திசையில் இருந்து வந்தாலும், டெல்லியில் இருந்து வந்தாலும் சரி.. லோக்கலில் இருந்து வந்தாலும் சரி.. அவர்களுக்கு திமுக வெற்றியை மட்டுமே கொடுக்கும் என்று நேரத்தில் சொல்லிக்கொள்கிறேன் என்று பேசினார். இதன்மூலம் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் மறைமுகமாக உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.