என்ன செய்யப் போகிறார் எடப்பாடி பழனிசாமி? எப்ப வரும் வேட்பாளர்கள் பெயர்கள்!!

 

திமுக சார்பில் மாநிலங்களவைக்கு வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல் ஹாசனும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு அதிமுக வேட்பாளர்களை களம் இறக்க உள்ளது. நடிகை விந்தியாவுக்கு எம்.பி. சீட் உறுதி என்று கூறப்படும் நிலையில் மீதமுள்ள ஒரு இடத்திற்கு யார் என்பது தான் தற்போதைய பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

தேமுதிகவுக்கு இந்த இடத்தை தரவேண்டும் என்று பிரேமலதா போர்க்கொடி தூக்கியுள்ளார். பாஜக வில் அண்ணாமலை அல்லது பாமகவில் அன்புமணி ராமதாஸ் பெயர்களும் அடிபடுகிறது. அண்ணாமலைக்கு சீட் கொடுத்தால் அடிமட்டத் தொண்டர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதாலும், தன்னுடைய சமுதாயத்தைச் சார்ந்த ஒருவரை வளர்த்து விட எடப்பாடி விரும்பமாட்டார் என்பதாலும் அண்ணாமலைக்கு வாய்ப்புகள் குறைவு தான்.

அப்பா - மகன் போட்டியில் அல்லாடும் பாமகவால் பெரிய ஆதாயம் இல்லை, மகனுக்கு கொடுத்தால் அப்பா திமுக பக்கம் போய்விடுவார் என்ற அச்சமும் எழுவதால் அன்புமணிக்கும் வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது. அன்புமணிக்கு எம்.பி. பதவி கிடைக்கக் கூடாது என்பதற்காகவே நேற்றைய டாக்டர்.ராமதாஸின் செய்தியாளர் சந்திப்பு நடந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் யார் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி சென்னையில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். த

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக முன்னணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, டாக்டர் விஜயபாஸ்கர், வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக வேட்பாளர்கள் பெயர் எப்ப வரும் என்று கட்சியினரை விட அரசியல் விமர்சகர்கள் மத்தியில் தான் ஆர்வம் அதிகமாக உள்ளது.