கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மின்னழுத்த கோபுரம்.. வைரல் வீடியோ!

 

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மின்கோபுரம் சாய்ந்து விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேட்டூர் அணை நிரம்பி விட்டதால் அணைக்கு வரும் 1.50 லட்சம் கன அடி தண்ணீர் முழுவதுமாக காவிரியில் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையிலிருந்து காவிரியில் 35 ஆயிரம் கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இருகரைகளையும் தொட்டு ஆர்ப்பரித்து ஓடுகிறது.

இந்த நிலையில், திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகே, ஆற்றுப்பகுதியில் உள்ள 1 லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் ராட்சத கோபுரம், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக அடிப்பகுதி அரித்துச் செல்லப்பட்டது.

எப்போது வேண்டுமானாலும் அந்த மின்கோபுரம் சாய்ந்து விழும் அபாய நிலையில் இருந்ததால் கொள்ளிடம் ஆற்றில் உள்ள மின் கோபுரத்திற்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. பின்னர் மாற்று வழியில் மின்சாரம் வழங்கப்பட்டது.