கரூர் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய விஜய்!!
Oct 19, 2025, 06:47 IST
கரூர் துயர நிகழ்வில் பலியான 41 பேரின் குடும்பங்களுக்கு இறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்த விஜய், வங்கிக் கணக்கு மூலம் செலுத்தியதாக கூறியுள்ளார்.
இது குறித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள விஜய், காணொலி அழைப்பில் சொன்னதைப் போல நேரடி சந்திப்பிறாக சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அனுமதி கிடைத்தது நிச்சயமாகச் சந்திப்போம்
ஏற்கனவே அறிவித்தபடி குடும்ப நல நிதியாக 20 லட்சத்தை வங்கியின் RTGS வழியாக 18-10-2025 அன்று அனுப்பி வைத்துள்ளோம். அதை உதவிக்கரமாக ஏற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளிக்கு முன்னதாகவே நிதியை வழங்கிவிட வேண்டும் என்று திட்டமிட்டுவங்கி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையே பணத்தை செலுத்தியுள்ளதாகத் தெரிகிறது.