மீண்டும் நடிக்கப் போகிறார் விஜய்.. பத்திரிக்கையாளர் பிரகாஷ் பரபரப்பு தகவல்!!
ஜனநாயகன் தன்னுடைய கடைசிப் படம் என்றும் பல கோடிகள் வருமானம் தரும் திரைத்துறையை விட்டுவிட்டு மக்கள் பணியாற்றவே கட்சி தொடங்கியுள்ளேன் என்றும் நடிகர் விஜய் அறிவித்து இருந்தார்.
விஜய் யின் தவெக வுடன் கூட்டணிக்கு யார் வந்தாலும் சேர்த்துக்கொள்வோம். எங்களுடையது கூட்டணி ஆட்சி என்றெல்லாம் பேசினார். அதிமுகவுடன் பாதிக்கு பாதி தொகுதிகளும் இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி என்றெல்லாம் பேரம் பேசியதாக தகவல்கள் வந்தது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி அறிவிப்பு வந்தவுடன் தவெக தனித்து விடப்பட்டதாக ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள மூத்த பத்திரிக்கையாளர் பிரகாஷ், இயக்குனர் நெல்சன் மற்றும் அறிமுக இயக்குனர்களிடம் நடிகர் விஜய் கதை கேட்டு வருவதாகவும், 2026 தேர்தல் முடிந்ததும் மீண்டும் நடிக்கப் போய்விடுவார் என்றும் கூறியுள்ளார். மேலும், விஜய் யை அரசியலில் இறக்கியது பாஜக தான் என்றும் அதிமுக பாஜக கூட்டணியில் தவெக ஐக்கியமாகிவிடும் என்றும் பிரகாஷ் தெரிவித்துள்ளார்
மீண்டும் நடிக்கப் போய்விடுவார் விஜய் என்ற தகவல் தவெக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.