விஜய் மீது சரமாரி குற்றச்சாட்டு.. சீமானின் அறச்சீற்றம்?

 

கரூர் துயரச் சம்பவத்திற்கு முழுக் காரணமும் விஜய் தான் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.விஜய் வீடியோ குறித்து கேட்ட செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ”விஜய் வரவில்லையென்றால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்குமா?

கரூரில் மட்டும் ஏன் நடந்தது என்று கேட்கிறார். இப்படி நடக்க வேண்டும் என்று நினைக்கிறாரா? மற்ற ஊர்களிலும் மயக்கமடைந்துள்ளனர். இங்கு மயக்கமடைந்தவர்களை மிதித்துச் சென்றதால் உயிரிழந்துள்ளனர். கத்திக் குத்து என்று குற்றம் சாட்டுகிறார்கள். நான் மருத்துவமனையில் எல்லோரையும் பார்த்தேன். யாருக்கும் கத்திக் காயம் இல்லை.

எல்லோருமே கூட்டத்தில் அடிபட்டு, மிதிபட்ட காயங்களுடன் தான் இருந்தார்கள். வீடியோவில் அவர் பேசியது சரியில்லை. சி.எம். சார் என்று அவர் சொன்னது சரி கிடையாது. சினிமாவில் தான் என்னை வேணும்னா என்ன பண்ணு அவங்களை விட்டுடு என்று வசனம் பேசுவோம்.” என்று சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார் சீமான்.