காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் தமிழர்களுக்கு காயம்! தமிழ்நாடு அரசு உதவி!!

 

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் பள்ளத்தாக்கு என்ற சுற்றுலாத் தலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் காயமடைந்தனர், ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த டாக்டர் பரமேஸ்வரம், சந்துரு (83), பாலச்சந்திரா (57)  ஆகிய மூவரும்அனந்த்நாக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தமிழக அரசு உதவி எண்களை வெளியிட்டு, காஷ்மீரில் உள்ள 28 தமிழர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.