ஆற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பரிதாப பலி.. நாவல் பழம் பறிக்க சென்றபோது நிகழ்ந்த சோகம்!

 

திண்டிவனம் அருகே நாவல் பழம் பறிக்கச் சென்ற 2 சிறுமிகள் உள்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சஞ்சய், சிறுமிகள் பிரியதர்ஷினி, சுப்புலட்சுமி ஆகியோர் நல்லாத்தூரில் இருந்து ஓங்கூர் செல்லும் ஓடையில் உள்ள நாவல் மரத்தில் பழம் பறிக்கச் சென்றனர்.

கனமழை காரணமாக, தற்போது அந்த ஓடையில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில், நாவல் பழம் பறிக்க மூன்று பேரும் ஓடையை கடந்து செல்ல முயன்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிகிறது.

பள்ளிச் சீருடைகள் தண்ணீரில் மிதந்ததை கண்ட நபர் ஒருவர், போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில், சம்பவ இ சென்ற காவல்துறையினர், 3 பேரில் உடல்களை மீட்டு கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழம் பறிக்கச் சென்ற 3 பேர் உயிரிழந்த சம்பவம் கோனேரிக்குப்பம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.