இன்று கனமழைக்கு வாய்ப்பு.. அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இதன்காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் இன்று முதல் 11-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதனிடையே இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.