தங்கம் வாங்க சரியான நேரம்.. சவரனுக்கு 160 ரூபாய் குறைவு.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

 

உலகில் எல்லாவற்றுக்கும் மேலான மதிப்பு தங்கத்திற்கு உண்டு. உலகின் எல்லா நாட்டு பொருளாதாரத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது தங்கம். ஏழை, பணக்காரர் என எல்லாருமே தங்கத்தை அழகுக்காக மட்டுமின்றி ஆத்திர அவசரத்திற்கு கடன் பெறவும் வாங்குகிறார்கள். தங்கம் இந்தியாவில் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக உள்ளது.

மற்ற பொருட்களை இங்கு விற்பது கடினம். ஆனால் தங்கத்தை கொடுத்தால் அடுத்த நொடி காசு கிடைக்கும். அப்படிப்பட்ட தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. தங்கம் விலை நேற்று உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து, ரூ.6,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, ரூ.53,680-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,513-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 17 ரூபாய் குறைந்து, ரூ.5,496-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 86,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, ரூ.86,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.86.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.