சரசரவென குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு 880 ரூபாய் குறைந்தது.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

 
Gold-Price

எந்த நாட்டில் பொருளாதார பிரச்சனை என்றாலும், மக்கள் சட்டென தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவும் மந்தமான பொருளாதார நிலையால் பங்குச் சந்தையில் உள்ள முதலீடுகளை எடுத்து தங்கத்திலேயே முதலீடு செய்கிறார்கள். டாலரின் மதிப்பு குறைந்தாலோ அல்லது அந்நாட்டு வங்கிகளில் சூழ்நிலை சரியில்லாத பட்சத்தில் தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பானது என கருதி சேமிக்கிறார்கள்.

மேலும் வருமான வரி பிரச்சனையும் முக்கிய காரணமாக உள்ளது. இப்படி பல வகையிலும் தங்கத்தில் பணத்தை போட மக்கள் விரும்புவதால், அதற்கு பலத்த கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கமாக இருந்த தங்கம் விலை, இன்று விலை அதிரடியாக குறைந்து விற்பனையாகி வருகிறது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Gold

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு எந்த மாற்றமுமின்றி விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 110 ரூபாய் குறைந்து, ரூ.6,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து, ரூ.54,000-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,619-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 90 ரூபாய் குறைந்து, ரூ.5,529-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 1,00,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 3,300 ரூபாய் குறைந்து, ரூ.97,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.97.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.