மோடி, அமித்ஷாவுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்னவர் யார் தெரியுமா ?

 

இன்று 2025 புத்தாண்டு பிறந்ததையொட்டி அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இருவருக்கும் தனித்தனியே கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் அதை எக்ஸ் தளத்திலும் பகிர்ந்துள்ளார்.

இம்புட்டு அக்கறையா பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் வாழ்த்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் சொல்ல மட்டும் தோணவே இல்லை போலிருக்கு. இன்று காலை வரையிலும் அவரிடமிருந்து வாழ்த்துச் செய்தி வரவில்லை.