கேப்டனின் கனவுத் திட்டத்தை செயல்படுத்திய அண்ணன் ஸ்டாலினுக்கு நன்றி.. பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!!

 

வீடு தேடி ரேஷன் பொருட்கள் கொண்டு வரும் திட்டம் கேப்டன் விஜயகாந்தின் கனவுத் திட்டமாகும். இதை முதல் தேர்தல் அறிக்கையிலேயே அவர் தெரிவித்து இருந்தார். அப்போது அது சாத்தியமில்லாதது என்று கூறிய அனைவரும் இப்போது வாயடைத்துப் போய் உள்ளனர். கேப்டனின் கனவுத் திட்டத்தை தாயுமானவர் திட்டம் என்ற பெயரில் முதியவர்களுக்கு முதல் கட்டமாக அறிமுகப்படுத்தியுள்ள முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலினுக்கு நன்றி.

முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலினின் உடல்நலம் குறித்து கேட்கத் தான் சென்று சந்தித்தேன். கேப்டன் உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது பலமுறை நேரில் வந்து நலம் கேட்டவர் அண்ணன் ஸ்டாலின். அதே போல் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்னர் கேப்டனை சந்தித்து வாழ்த்துப் பெற்றுச் சென்றார். அந்த மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை நலம் விசாரிக்கச் சென்றேன் என்று சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்