பாகிஸ்தானை முந்தும் தமிழ்நாட்டு பொருளாதாரம்... இணையத்தில் வைரலாகும் வரைபடக் காட்சி!!
இந்தியா - பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தை தமிழ்நாட்டுப் பொருளாதாரம் முந்துவது போல் உள்ள வரைபடக் காட்சி சமூகத் தளத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு உற்பத்திக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வரைபடக் காட்சியில் 1995ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான 30 ஆண்டுகளில் தமிழ்நாடு மற்றும் பாகிஸ்தான் நாட்டின் ஜிடிபி தொகை ஒப்பிடப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் ஜிடிபி உயரத் தொடங்குகிறது. 2021ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் வெகு விரைவாக உயர்ந்து பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தை முந்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது/
இந்த எண்கள் எதன் அடிப்படையில் எங்கிருந்து பெறப்பட்டது என்ற தகவல்கள் தெரியவில்லை. திமுகவினர் இதைப் பகிர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு பகிர்ந்து வருகிறார்கள்.