தமிழ்நாட்டின் அன்னா ஹசாரே விஜய்.. கடுமையாகச் சாடிய தொல். திருமாவளவன்!!

 

தமிழ்நாட்டின் அன்னா ஹசாரே விஜய் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கடுமையாகச் சாடியுள்ளார். 

விஜய் போன்ற சக்திகளை வைத்து திமுக, அதிமுக வை வீழ்த்திவிட்டு காலூன்றி விட்டால் பின் இவர்களை அப்புறப்படுத்துவது பாஜகவுக்கு  மிகவும் எளிது. 

அன்னா ஹசாரேவை பயன்படுத்தி டெல்லியில் காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிந்தது பாஜக. பின்னர் அரவிந்த் கேஜ்ரிவாலை அப்புறப்படுத்திவிட்டு, பாஜக வந்து விட்டது. இது தான் நாளை தமிழ்நாட்டில் நடக்கும். 

ஓரிரு தேர்தல்களுக்கு விட்டுப்பிடிப்பதே அவர்கள்  வழி. அந்த வகையில் தற்போது நடப்பவை யாவும் கலவர பூமியாக தமிழ்நாடு மாற அடித்தளமே என்று தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

திருமாவளவன் பேசியதற்கு வலு சேர்க்கும் வகையில் விஜய் கட்சியை பாஜக கூட்டணிக்கு இழுப்பதற்கான வேலை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் வழியில் விளையாட்டுப் போட்டிக்காக டெல்லி செல்கிறேன் என்று உடன் பாஜகவினரையும் தனி விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார் ஆதவ் அர்ஜுனா.