பல்கலைக் கழக துணை வேந்தர்களுடன் ’வேந்தர்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!!

 

பல்கலைக் கழகங்களின் சட்டத்திருத்த மசோதா உச்சநீதிமன்றத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களுக்கு வேந்தர் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதைத் தொடர்ந்து பல்கலைக் கழகங்களில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், நிரப்பபட வேண்டிய காலியிடங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். முதல் கட்டமாக பல்கலைக் கழக துணை வேந்தர்கள், பதிவாளர்களை இன்று சந்தித்துப் பேச உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டிற்கு தொடர்பில்லாத துணை வேந்தர்கள், தமிழக அரசின் திட்டங்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட துணைவேந்தர்கள் விரைவில் மாற்றப்படலாம் என்ற தகவலும் உள்ளது.

முதலமைச்சரே வேந்தரும் ஆகிவிட்டதால், பல்கலைக் கழகங்கள் இனி தமிழ்நாடு அரசின் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.