சென்னை கொளத்தூரில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பரிசு!!
Feb 28, 2025, 08:32 IST
சென்னை கொளத்தூரில் 240 கோடி ரூபாய் செலவில் தந்தை பெரியார் பெயரில் புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மருத்துவமனை திறப்புவிழா வீடியோவுடன் ”வடசென்னை மக்களின் உயிர்காக்கும் மருத்துவமனையாக காலாகாலத்துக்கும் செயல்படவுள்ளது கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை! அதுவும் என் பிறந்தநாளையொட்டி இதனைத் திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தது என் பேறு. மருத்துவர்களும், செவிலியர்களும் மக்களிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள்! பொதுமக்கள் இது உங்கள் மருத்துவமனை என உணர்ந்து தூய்மையைப் பேணுங்கள் என வேண்டிக்கொள்கிறேன்.” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.