தங்கம் விலை திடீர் மாற்றம்.. இன்றைய நிலவரம் என்ன?

 

பெண்களுக்கு சொத்து சேர்க்கிறார்களோ இல்லையோ, கண்டிப்பாக தங்கத்தை சேர்த்துவிடுவார்கள் பெற்றோர். தன் வீட்டை விட்டு இன்னொரு வீட்டுக்கு போகும் பெண்களுக்கு தங்கத்தைத்தான் சீதனமாக பெற்றோர்கள் போடுகிறார்கள். இன்றுவரை அந்த பாரம்பரியம் தொடர்கிறது. பெண்கள் விரும்பி அணிவது தங்கத்தை தான். தற்போது ஆண்களுக்கும் தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்துள்ளது. தங்க நகைகளை அணியும் ஆண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தங்கத்தை அதிகம் வாங்க காரணம், அவசரத்திற்கு அடகு வைத்து பணத்தை புரட்ட முடியும். தங்கம் இருந்தால் தைரியமாக தொழில் தொடங்கலாம். வீடு கட்டலாம். தங்கத்தின் மீதான கடன் வட்டி மிகவும் குறைவு. எனவே மக்கள் தங்கத்தை முதலீடாகவும், வாழ்க்கையின் அங்கமாகும் பார்க்கிறார்கள். கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கமாக இருந்த தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு எந்த மாற்றமுமின்றி விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து, ரூ.6,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ரூ.53,280-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,464-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 8 ரூபாய் குறைந்து, ரூ.5,456-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 91,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் உயர்ந்து, ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.92.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.