தமிழ்நாடு முழுவதும் நாளை சிறப்பு கல்வி கடன் முகாம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை?

 

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நாளை சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் ஏழை மாணவர்கள் உயர்கல்வி பயில பல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் கல்விக்கடன் வழங்கி வருகின்றது. மாணவர்கள் எளிதாக வங்கிகளை அணுகி கல்வி கடன் பெறும் வகையில் மாநில அரசும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

அந்த வகையில் நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு கல்விக்கடன் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள மாணவர்கள் பெற்றோர்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடைய ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, பேன் கார்டு, சாதி சான்றிதழ், வருமான சான்று, புகைப்படம், கல்வி சான்று, கல்லூரி கட்டண ரசீது, முதல் பட்டதாரி சான்று, கல்லூரி சேர்க்கை கடிதம் மற்றும் வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் அவற்றின் நகல்களையும் தயாராக எடுத்து வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.