சீதாராம் யெச்சூரி மறைவு.. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சீதாராம் யெச்சூரி. மாநிலங்களவை உறுப்பினராகவும், கட்சியின் முக்கிய தலைவராகவும் இருந்தவர். கடந்த 2015-ம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அவர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.
சீதாராம் யெச்சூரி மறைந்த செய்தி இடதுசாரி அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் அரசியல் கட்சியினர், இடதுசாரிகள், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த சீதாராம் யெச்சூரி உடலை அவரது குடும்பத்தினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.