மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்... இனி சனிக்கிழமை கட்டாய வகுப்புகள்!! கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு!

 

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

2022 - 2023 கல்வியாண்டில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தாமதமானது. மாணவர் சேர்க்கையை முடித்த கல்லூரிகள் வகுப்புகளை தொடங்கலாம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டிருந்ததது. எனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின.

அத்துடன் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் கற்றல் இழப்பு ஏற்பட்ட நிலையில் நேரடியாக உயர்கல்விக்கான வகுப்புகளை தொடங்காமல் முதல் ஒரு வாரத்திற்கு அடிப்படை வகுப்புகளை நடத்தி விட்டு அதன் பிறகு பாடங்களை நடத்த வேண்டும் எனவும் கல்லூரி பேராசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

வகுப்புகள் மிக தாமதமாக தொடங்கப்பட்டதால் பாடத் திட்டங்களை நிறைவு செய்வதில் சிக்கல் உருவாகியுள்ளது. எனவே பாடத்திட்டத்தை உரிய நேரத்தில் நடத்தி முடிக்கும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

மே 1-ம் தேதிக்குள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத் திட்டத்தை நிறைவு செய்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்ககத்தின் இந்த முடிவு கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.