அதிர்ச்சி.. ரன்னிங்கில் பற்றிய திடீர் தீ.. மள மளவென எரிந்த கார்.. வைரல் வீடியோ!
பாப்பிரெட்டிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம் அரூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு, சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரில் சேலத்தைச் சேர்ந்த யுவராஜ், ஹரிஸ் உள்பட 4 பேர் பயணம் செய்தனர்.
அப்போது கார் எச்.புதுப்பட்டி சுங்கச்சாவடி அருகே சென்ற போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை எழுந்தததாக தெரிகிறது. இதையறிந்த நான்கு பேரும், காரில் இருந்து கீழே இறங்கிய நிலையில், மளமளவென தீப்பற்றி கார் முழுவதும் கொளுந்து விட்டு எரிந்தது.
இது குறித்து அங்கிருந்தவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.