திருச்சியில் சிவாஜி சிலை... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

 

திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை அருகே நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் முழு உருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்​சி​யில், நடிகர் பிரபு, அவரது சகோ​தரர் ராம்​கு​மார், பிரபு​வின் மகன் நடிகர் விக்​ரம் பிரபு உள்​ளிட்ட சிவாஜி​யின் குடும்​பத்​தினரும் பங்​கேற்​றனர்.

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம், பேரறிஞர் கனரக சரக்கு வாகன முனையம் திறப்பு விழா மற்றும் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி அடிக்கல் நாட்டுவிழா உள்ளிட்ட பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வந்திருந்தார். முதலமைச்சர் வரும் வழியெங்கும்  பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர்.