ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் செங்கோட்டையன்...

 

மனம் திறந்து பேசப் போகிறேன் என்று செங்கோட்டையன் அறிவித்த போது, அது வெறும் செய்தியாளர்கள் சந்திப்பாகத் தான் இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் இன்று ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கோபி அதிமுக அலுவலகம் முன்பு கூடியிருக்கிறார்கள்.

செங்கோட்டையன் கட்டுப்பாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து தொண்டர்கள் குவிந்துள்ளனர். முன்னாள் எம்.பி. சத்தியபாமா, பவானி சாகர் எம்.எல்.ஏ பன்னாரி ஆகியோர் செங்கோட்டையன் உடன் திறந்த வேனில் வந்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியை முழுமையாகப் பகைத்துக் கொண்ட நிலையில், செங்கோட்டையனின் முடிவு தான் அவருடைய அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

இன்றைய சந்திப்பில் தன்னுடைய அதிருப்தியை மட்டுமே வெளிப்படுத்துவார். எதிர்காலத் திட்டங்கள் குறித்து எந்தவிதமான கருத்துக்களையும் தெரியப்படுத்த மாட்டார் என்றே நம்பப்படுகிறது.

திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனியிலிருந்து செங்கோட்டையனிடம் பேசியதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தி உலவுகிறது. தன்னுடைய ஆதரவாளர்கள் கூட்டத்தை திமுகவுக்குத் தெரியப்படுத்தத்தான் இந்த சந்திப்பா என்ற கோணத்திலும் ஒரு பார்வை உள்ளது.

எடப்பாடி பழனிசாமியால் பாதிக்கப்பட்டவர்களும் செங்கோட்டையனுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுக்க முன்வருவதையும் காண முடிகிறது.